Ad Code

Responsive Advertisement

தேர்வு துறை இணையதளத்தில் தனியார் நிறுவனத்துக்கு 'லிங்க்'

தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்தும், அரசு தேர்வுகள் துறை இணையதளம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதால், தேர்வு மற்றும் துறை ரீதியான ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது.

முக்கிய தகவல்கள்:பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசு தேர்வுகள் துறை தனி அமைப்பாக செயல்படுகிறது. இந்த துறை சார்பில், தொழிற்கல்வி டிப்ளமோ தேர்வு, திறனறித் தேர்வு, மத்திய அரசின் திறனாய்வு தேர்வு உட்பட, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுத் துறைக்கு, www.tndge.in என்ற இணையதளம் உள்ளது. இந்த தளத்தில், தேர்வுகள் தொடர்பான பள்ளிகளின் பதிவுகள்; மதிப்பெண் விவரங்களை உள்ளீடு செய்தல்; தேர்வு முடிவுகள் வெளியிடுதல்; தேர்வு அறிவிப்புகள் வெளியிடுதல்; சான்றிதழ் பதிவேற்றம் செய்து வழங்குதல் போன்ற முக்கிய தகவல்கள் இடம் பெறுகின்றன.ஆனால், இணையதளம் பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இணையதளத்தை, 'கே லேப்' என்ற தனியார் நிறுவனம் தான் வடிவமைத்து உள்ளது.

இணையதள முகப்பு பக்கத்தின் அடிப்பகுதியில், தனியார் நிறுவன பெயர் உள்ளது; அதை, 'கிளிக்' செய்தால், நேரடியாக, 'கே லேப்' இணைய தளத்துக்கு, 'லிங்க்' சென்று விடுகிறது. அதில், தனியார் நிறுவன வணிகம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதுபற்றி, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
எந்த ஒரு அரசு நிறுவன இணையதளமும், மாநில அரசின், 'சர்வர்' மூலமோ அல்லது மத்திய அரசின், 'நிக்' என்ற சர்வர் மூலமோ தான் செயல்பட வேண்டும். இணையதள முகவரியும், அந்த அடிப்படையிலேயே அமைய வேண்டும்.ஆனால், தேர்வுத் துறையில் இருந்த சிலர், தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் மூலம், இந்த இணையதளத்தை உருவாக்கிள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

முடக்க வேண்டும்:எனவே தான், இணையதளத்தில் தனியார் நிறுவனத்தின் பெயரை பொறித்தும், அதன் வழியே தனியார் நிறுவன இணையதளத்துக்கு நேரடி, 'லிங்க்'கும் கொடுத்து வைத்துள்ளனர்; இது சட்டப்படி தவறு. இதனால், தேர்வுத் துறையின் அலுவலக தகவல்கள், தனியார் நிறுவன இணையதளம் மூலம், கசிய வாய்ப்பு உள்ளது. எனவே, அரசின் ஒப்புதல் பெற்று, புதிய இணையதளத்தை உருவாக்கி, தற்போதைய இணையதள செயல்பாட்டை முடக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement