Ad Code

Responsive Advertisement

புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை விதித்துள்ளது.அவை வருமாறு:

புதிய பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கக்கூடாது. எந்தப்பாடப்பிரிவை சார்ந்தவரோ அதே பாடப்பிரிவைச் சேர்ந்தவரையே அவரது இடத்தில் பணியமர்த்த வேண்டும். எவ்வித புகாரும் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் பெற்று செப்.,10க்குள் சமர்ப்பிக்க வேண்டும் செப்.,11,12ல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

மாவட்ட அளவிலான மனமொத்த மாறுதல் உத்தரவு செப்.,14, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான மாறுதல் உத்தரவு செப்.,15ல் வழங்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement