Ad Code

Responsive Advertisement

இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அவர் தனது மனுவில், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தி மொழியை பயிற்றுவிப்பதன் மூலம் நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும், இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்கினால் மட்டுமே கல்வி உரிமை சட்டத்துக்கு அர்த்தம் இருக்கும் என்றும், மேலும் இது நாடு முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் கூறி இருந்தார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், அமிதவ ராய் ஆகியோர் நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement