Ad Code

Responsive Advertisement

விழி ஒளி பரிசோதகர் பட்டப்படிப்பு துவக்கம்

தமிழகத்தில் முதன்முறையாக, சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 'விழி ஒளி பரிசோதகர்' என்ற, நான்காண்டு பி.எஸ்சி., பட்டப்படிப்பு துவக்கப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், 1962 முதல், 'விழி ஒளி பரிசோதகர்' என்ற, டிப்ளமோ படிப்பு உள்ளது; 

ஆண்டு தோறும், 30 மாணவர்கள் படித்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், 20 இடங்களுடன், விழி ஒளி பரிசோதகர் என்ற நான்கு ஆண்டு பி.எஸ்சி., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. இது, மூன்று ஆண்டு பாடப்பயிற்சி மற்றும் ஓராண்டு, மருத்துவமனையில் செயல்முறை பயிற்சியுடன் கூடியது. இந்த பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு, சென்னை ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்தது. அதில், இடங்கள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் நேற்று துவங்கியது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாணவர்களுக்கு சேர்க்கை கடிதத்தை வழங்கினார். அவர் கூறுகையில், ''டில்லியில் உள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் தான், விழி ஒளி பரிசோதகர் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதேபோல், அரசு பல்நோக்கு மருத்துவமனையிலும், 16 விதமான மருத்துவம் சாரா பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன,'' என்றார்.துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ''மாணவர் சேர்க்கை முடிந்து, இம்மாத இறுதியில் வகுப்புகள் துவங்கும்,'' என, மருத்துவமனை இயக்குனர் நமிதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement