Ad Code

Responsive Advertisement

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம்

இன்ஜி., மாணவர்கள் சிலருக்கு, 'டெங்கு' காய்ச்சல் அறிகுறி உள்ளதை தொடர்ந்து, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு, நிலவேம்பு கசாயம் அருந்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை விடுதியில் தங்கி படிக்கும், இறுதி ஆண்டு மாணவர்கள், 30 பேருக்கு, இரண்டு வாரங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. பல்கலையின் மருத்துவமனையில் சோதித்து பார்த்ததில், சிலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறி தெரியவந்தது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, மாணவர்கள் நிலவேம்பு கசாயம் குடிப்பதை அண்ணா பல்கலை கட்டாயமாக்கியுள்ளது. விடுதி வளாகத்திலுள்ள மாணவர் மற்றும் மாணவியருக்கான உணவகங்களில், நிலவேம்பு கசாயம், தினமும், மூன்று முறை வழங்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement