Ad Code

Responsive Advertisement

பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்

பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும். 

இதுதவிர, ஈ.பி.எப். பென்சன் பெறுபவர்கள் பென்சன் விபரங்களை மொபைலிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் வாயிலாக சந்தாதாரர்கள் தங்களது பி.எப். இருப்பு தொகையையும் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதியின் வாயிலாக 3.54 கோடி பி.எப். சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.

49.22 லட்சம் பென்சன்தாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாக இருக்கும். அதேபோல், 6.1 லட்சம் நிறுவனங்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என மத்திய மந்திரி தத்தாத்ரேயா தெரிவித்தார். இந்த அப்ளிகேஷனை இ.பி.எப்.ஓ. இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement