Ad Code

Responsive Advertisement

பணிக்கு செல்வதில் ஆசிரியர் தாமதம்: ஏ.இ.இ.ஓ., நேரில் விசாரணை

தம்மம்பட்டி அருகே, தகரப்புதூர் பஞ்சாயத்து மூலப்புதூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் சிலர், பணிக்கு காலதாமதமாக வருவதாக வாடிக்கையாக கொண்டுள்ளதாக, புகார் எழுந்தது. 

நேற்று, காலை 9.30 மணி வரை, பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டும் வந்தனர். இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வளையாபதிக்கு புகார் சென்றது. அவரது, உத்தரவின்பேரில் கெங்கவல்லி உதவி தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், நேரில் ஆய்வு செய்து, பணியிலிருந்த ஆசிரியர்களிடம், காலதாமதமாக வருவது குறித்து, விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து, கெங்கவல்லி ஏ.இ.இ.ஓ., உதயகுமார் கூறியதாவது: 

பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட ஒன்பது ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், ஒரு ஆசிரியர்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டும், மற்றொரு ஆசிரியர் தகவல் இல்லாமல் விடுப்பில் சென்றுள்ளார். ஆசிரியர் ஒருவர் பயிற்சி வகுப்புக்கும், இரண்டு ஆசிரியர் விடுமுறையில் உள்ளனர். தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை. மீதம் உள்ள மூன்று ஆசிரியர் பள்ளியில் இருந்தனர். இனி, காலதாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement