Ad Code

Responsive Advertisement

அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'

அடுத்த மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை, 22ம் தேதி (வியாழன்) விஜயதசமி, 23ம் தேதி (வௌளி) மொகரம், 24ம் தேதி (சனி), 25ம் தேதி (ஞாயிறு) ஆகியவையே அந்த விடுமுறை நாட்கள்.

ஒரே வாரத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் பல பணிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து நாட்களுமே அரசு அலுவலகங்கள் இயங்காது என்பதால், சொந்த வேலையாக அங்கு செல்ல வேண்டியவர்கள் செல்லத் தேவையில்லை.சுற்றுலா: பள்ளிகளுக்கும் தொடர் விடுமுறை என்பதால், குழந்தைகளும் விடுமுறையில் இருப்பர்.

எனவே, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோரும் இப்போதே திட்டமிட்டால், பயணம் மகிழ்ச்சியானதாக அமையும்.வங்கிகள்: வங்கிகளுக்கும் இதே கதை தான். நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை என்பதால், அவர்களுக்கும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்றால் வர்த்தகர்களும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. இதுகுறித்து வங்கிகள் இனிமேல் தான் அறிவிக்கும்.தொடர் விடுமுறை என்றால் ஏடிஎம்-களிலும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே, அதற்கேற்றார்போல் பொதுமக்கள் திட்டமிடுவது நல்லது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement