அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் 75-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்தன.
இதன்மூலம் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், சங்ககிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும், திருநெல்வேலி, வேலூர், மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களும், தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை