Ad Code

Responsive Advertisement

499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்.

சட்டசபையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான  வாதத்தின் போது, நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்து, கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

மாணவர்கள் கணித பாடத்தை எளிய வகையில் கற்க, 1.28 கோடி ரூபாய் செலவில், 64 பள்ளிகளில் கணித ஆய்வகம் ஏற்படுத்தப்படும். பள்ளி வசதியில்லாத பகுதிகளில், 499 தொடக்கப் பள்ளிகளை துவங்கவும், 186 தொடக்கப் பள்ளிகளை நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தவும் தகுதியான குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

கணினி வழியில், வீடியோ கான்பரன்ஸ் வகுப்புகள் நடத்த, திருவண்ணாமலை, வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில், 70 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு, அனிமேஷன் வகை குறுந்தகடுகள், 1.5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் ஆசிரியர் தங்க, திருச்சியில், மூன்று கோடி ரூபாய் செலவில், ஆசிரியர் இல்லம் அமைக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement