Ad Code

Responsive Advertisement

கல்விக்கடன் வழங்குவதில் குறைபாடு:ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தஞ்சாவூரில், மாணவிக்கு கல்விக்கடன் வழங்கியதில் ஏற்பட்ட சேவை குறைபாட்டால், மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, வங்கிக்கு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சை, அருளானந்த நகரைச் சேர்ந்தவர், லாரன்ஸ் ரபேல் மகள் கேத்ரின் இசபெல் ரபேலின். இவர், செவிலியர் படிப்பு செலவிற்காக, கல்விக்கடன் கேட்டு வங்கியை அணுகினார்.வங்கி நிர்வாகத்தினர், கல்விக்கடன் தர ஒப்புக்கொண்டு, கடந்த, 2004, செப்டம்பரில் முதல் தவணையாக, 39,250 ரூபாயும், 2005 ஜூலையில், இரண்டாம் தவணையாக, 39,250 ரூபாயும் கொடுத்தனர்.இந்நிலையில், மூன்றாவது தவணையை வழங்காமலே, அந்த தொகைக்கும் சேர்த்து வட்டி செலுத்துமாறு, வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், லாரன்ஸ் ரபேல் வட்டி செலுத்த மறுத்துவிட்டார்.

இதையடுத்து, ஆசிரியையான லாரன்ஸ்ரபேல் மனைவிக்கு, வட்டியை செலுத்துமாறு வங்கி நிர்வாகம் நிர்பந்தித்துள்ளது. இதனால், வட்டி செலுத்தியதுடன் மனஉளைச்சலுக்கு ஆளான லாரன்ஸ் ரபேல், தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை, குறைதீர் மன்ற தலைவர் ராஜகோபால் மற்றும் உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர். அதில், வங்கி தரப்பில், மூன்றாவது தவணை கொடுக்காதது,

ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, மூன்றாவது தவணை கொடுக்காமலே வட்டியாக வசூலித்த வங்கி நிர்வாகம், வட்டித்தொகையுடன் மூன்று லட்சம் ரூபாயும், வழக்கு செலவிற்காக, 10 ஆயிரமும், 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement