Ad Code

Responsive Advertisement

விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு!

தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம் சார்பில், முதற்கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறை துவங்கப்பட உள்ளது. இதற்காக, அப்பள்ளிகளில், கணினி வசதிகள் குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 2013ம் ஆண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், 'கனெக்டிங் கிளாஸ்' கல்விமுறை அறிமுகப்படுத்தப் பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஐந்து மேல்நிலைப் பள்ளிகள், இணையம் மூலம் இணைக்கப்பட்டு, ஒரு பள்ளியில் நடைபெறும் வகுப்பை, மற்ற பள்ளிகளில் காண்பிக்கும் முறை, நடைமுறைப் படுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம் இத்திட்டத்தை விரிவுபடுத்தி, 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது.

இதில், ஒரு பள்ளியில் நடைபெறும் வகுப்பை அனைத்து பள்ளிகளிலும் காணொலி காட்சி மூலம் காணலாம். அந்த நேரத்தில், மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெறலாம்.

உதாரணமாக, ஒரு பள்ளியில், அனிமேஷன் மூலமாக ஒரு பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டால், அதை, மற்ற 24 பள்ளிகளிலும் காணலாம்.

இத்திட்டத்தை செயல்படுத்த தற்போது, அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை தேர்வு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் மூலம், கற்றல், கற்பித்தல் முறையை எளிமையாக்கவும், நவீன முறையில் கற்பிக்கவும், வழிவகை செய்யப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை, 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இந்த திட்டத்தை செயல்படுத்த, மாவட்ட கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, தேர்வு செய்யப்படும் பள்ளிகளில், புரொஜக்டர், கணினி மற்றும் இணையம் ஆகிய

வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவை இல்லாத பள்ளிகளில், தேவையான வசதிகளை ஏற்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 25 பள்ளிகள், தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வெற்றி பெற்றால், தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும், 'விர்ச்சுவல் கிளாஸ்' மூலம் இணைக்கப்படும்.இதுகுறித்து, தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தின் அனைத்து பள்ளிகளையும் இணைப்பதற்காக, 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்தை துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கணினி வசதிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

மேலும், 'நவீன முறையில் மாணவர்களுக்கு கற்பிக்க, இந்த முறை பயன்படுத்தப்படும். விரைவில், 25 பள்ளிகளிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்படும்' என்றார்.

தேர்வு செய்யப்பட்டுள்ள 25 பள்ளிகள்

கிழக்கு தாம்பரம் (மகளிர்)

கோவிலம்பாக்கம்

ஜெய்கோபால் கரோடியா

(மகளிர்)

பெரிய காஞ்சிபுரம்

ஏகனாம்பேட்டை (மகளிர்),

வாலாஜாபாத் (மகளிர்)

உத்திரமேரூர் (மகளிர்)

பி.எஸ்.எஸ்., சீனுவாசன்

திருப்புட்குழி

அனகாபுத்துார்

சோழிங்கநல்லுார்

சோமங்கலம்

சதுரங்கப்பட்டினம்

சோத்துப்பாக்கம்

மதுராந்தகம் (மகளிர்)

அச்சிறுபாக்கம்

சூணாம்பேடு

கடப்பாக்கம்

செய்யூர்

புதுப்பட்டினம்

நந்திவரம்

பீர்க்கண்காரனை

குரோம்பேட்டை (மகளிர்)

திருவாத்துார்

செங்கல்பட்டு (மகளிர்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement