Ad Code

Responsive Advertisement

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வக்கீலாக பணி செய்யமுடியும். ஆனால், வக்கீலாக பதிவு செய்துள்ள 2,495 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இவர்கள் தற்காலிக வக்கீலாக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு நிர்வாக பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வக்கீல்கள் மணிகண்டன் வதன் செட்டியார், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த இரு வக்கீல்கள் மீது வக்கீல் சட்டம்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த 2 வக்கீல்கள் மீதும் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை,இவர்கள் இருவரும் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement