Ad Code

Responsive Advertisement

கோவை வேளாண் பல்கலை 'டிப்ளமோ' படிப்பு கலந்தாய்வு; 229 மாணவர் தேர்வு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று துவங்கிய 'டிப்ளமோ' படிப்புக்கான கலந்தாய்வில், 229 பேர் தாங்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தஞ்சை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எட்டு அரசு உதவிபெறும் கல்லுாரிகள் தவிர, ஆறு தனியார் கல்லுாரிகள் உள்ளன; இக்கல்லுாரிகளில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய இரு 'டிப்ளமோ' படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 360 இடங்கள், தனியார் கல்லுாரிகளில், 167 இடங்கள் என, 527 இடங்கள் இப்படிப்புகளுக்கு உள்ளன. இதில், குமரி மாவட்டம் பேச்சிப்பாறையிலுள்ள, அரசு உதவிபெறும் கல்லுாரியில் மட்டுமே, 40 இடங்களுக்கு தோட்டக்கலை படிப்பு உள்ளது.இக்கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கு, மாநிலம் முழுவதும் 1,847 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், தரப்பட்டியலின் அடிப்படையில், 800 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

துவக்க நாளான நேற்று, 229 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். நிறைவு நாளான இன்று, 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.பல்கலை மாணவர் சேர்க்கைக்குழு சேர்மன் மகிமைராஜ் கூறுகையில், ''முதல் நாள் அழைப்பு விடுக்கப்பட்ட, 400 பேரில், 229 பேர் பங்கேற்று, தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். நாளை (இன்று),400 மாணவர்கள் தரப்பட்டியல் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement