தமிழகத்தில், ஒரு லட்சம் மின் நுகர்வோர், 'அடிஷனல் செக்யூரிட்டி டிபாசிட்' என, அழைக்கப்படும், கூடுதல் காப்பு வைப்பு தொகையை, மின் வாரியத்திற்கு செலுத்தவில்லை. அதனால், அவர்களது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு மின் வாரியமானது, வீடுகளுக்கு புதிய மின் இணைப்பை வழங்கும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை இணைப்பிற்கு, 200 ரூபாய்; மும்முனை இணைப்பிற்கு, 600 ரூபாய் என, காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது. மின்சார பயன்பாட்டை பொறுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த காப்பு வைப்பு தொகையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, கூடுதல் மின்சாரம் பயன்படுத்துவோரிடம், அதிகமான காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வசூலிப்பதில்லை. நடப்பாண்டில், 45 லட்சம் மின் நுகர்வோர், கூடுதல் காப்பு வைப்பு தொகை செலுத்த தகுதியானவர்கள். இவற்றில், இரண்டு லட்சம் மின் நுகர்வோர், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளாகும். மீதமுள்ள, 43 லட்சம் நுகர்வோர் தான், வீடுகளுக்கான இணைப்பை பெற்றுள்ளவர்கள்.
இவர்களிடம், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணியை, ஏப்ரலில், மின் வாரிய அதிகாரிகள் துவக்கினர். தற்போது வரை, 42 லட்சம் பேர் கூடுதல் வைப்பு தொகை செலுத்தி உள்ளனர்; ஒரு லட்சம் பேர், இதுவரை செலுத்தவில்லை.
ரூ.210 கோடி வசூல்:
கூடுதல் வைப்பு தொகை செலுத்தாத வீடுகளின், மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது; அபராதத்துடன் தொகையை செலுத்திய பின், மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூடுதல் வைப்பு தொகை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று, 'விரைவாக செலுத்த வேண்டும்' என, அறிவுரை வழங்கும்படி தான், ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள், மின் இணைப்பை துண்டிப்பதாக புகார்கள் வருகின்றன. இந்தப் பிரச்னையில், யாருக்கும் பாதிப்பு இல்லாமல், காப்பு தொகை வசூலிக்க வேண்டும் என, உதவி பொறியாளர்
களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வைப்பு தொகையை செலுத்திய, 42 லட்சம் பேரிடம் இருந்து, சராசரியாக, ஒருவருக்கு, 500 ரூபாய் என்ற அளவில், மொத்தம், 210 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை