Ad Code

Responsive Advertisement

வெற்றிக்கு காரணம் என் தாய் '1 நாள் ஆசிரியர்' பெருமிதம்

''என் சிறந்த ஆசிரியர், என் அம்மா; நான் பெற்ற அனைத்து வெற்றி களுக்கும் காரணம், என் அம்மா தான்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெருமிதத்துடன் கூறியுள்ளார். சிறந்த ஆசிரியராக பணியாற்றி, இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக ஆனவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்; இவர் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பல துறைகளில் பிரபலமாக விளங்குபவர்களை, 'ஒருநாள் ஆசிரியராக' மாற்ற, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டார். இதன்படி, ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள, டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதய வித்யாலயா பள்ளியின், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று, ஒரு மணி நேரம் பாடம் நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:சிறுவயதில், நான், பயங்கர குறும்புக்காரனாக இருந்தேன்.

என் வால் தனங்களை பொறுக்க முடியாமல், அம்மா, என்னை நன்றாக அடித்து விடுவார்; சிறிது நேரத்தில் சமாதானப்படுத்தி, அன்பு மழை பொழிவார். அம்மா தான், என் மிகச்சிறந்த ஆசிரியர். பள்ளியில் படிக்கும் போது, நான் சராசரி மாணவனாகத்தான் இருந்தேன். 5 கி.மீ., நடந்துதான் பள்ளிக்கு செல்வேன்; அதுபற்றி, என் தாயிடம் புகார் சொல்வேன். ஆனால், கஷ்டப்பட்டு நன்றாக படித்தால் தான், வாழ்வில் உயர முடியும் என, அவர் கண்டிப்புடன் சொல்வார்.என் அனைத்து சாதனைகளுக்கும், அவரே காரணம்.இவ்வாறு, ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி, மாணவர் களிடம் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement