தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: வேளாண் துறை உதவி அதிகாரி பணிக்கு, ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள, 417 காலியிடங்களுக்கு, 3,136 பேர் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்ற, 715 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட இருக்கிறது.
அதற்கான பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் உள்ளது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, செப்., 7ம் தேதி முதல், 16ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதில் தேர்வு பெறுபவர்களுக்கு, நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அலுவலர் பதவிக்கு 117 காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு, பிப்ரவரியில் எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றவர் களுக்கு முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும், 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதிபெறாத மற்றும் வராதவர்களுக்கு பதில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்களை இணையதளத்தில் பார்க்கலாம். அவர்களுக்கு வரும், 24ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை