Ad Code

Responsive Advertisement

TNPSC மூலம் நடத்தப்படும் தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்; 20-ந் தேதி கடைசி நாள்

தாய்-சேய் நல அலுவலர் பணியிடம் நிரப்புதல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 89 தாய்-சேய் நல அலுவலர் பணியிடங்கள், முதன் முதலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நிரப்பப்படுகிறது. எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. நர்சிங் அல்லது பி.எஸ்சி. (பொது சுகாதார நர்ஸ்) படித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 20-ந் தேதி ஆகும். 

இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந் தேதி சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களின் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பாணை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும்.

எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிலும் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement