டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வில் பங்கேற்போருக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் ேதர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவிகள் அடங்கிய உதவி பிரிவு அதிகாரி (மாவட்ட வணிகவரித்துறை), சப்-ரிஜிஸ்திரார், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,136 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடத்தியது. அதை தொடர்ந்து நேர்முக தேர்வு ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்பட்டது. இதில், 2,222 பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் பொதுவரிசை நிலை (ஓவரால் ரேங்க்), வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்பு பிரிவு விண்ணப்பதாரர்கள் தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றை தங்களின் பதிவு எண் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இவ்வகையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் முதல்முறையாக தேர்வாளர்கள் தங்களது எண்ணை உள்ளீடு செய்து மற்றவர்கள் என்ன மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்றுள்ளனர் என்பதையும் பார்க்க முடியும். மேலும், கலந்தாய்வில் பங்கேற்போர் எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விவரமும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை