Ad Code

Responsive Advertisement

சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு இம்மாதம் முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு சேமநல நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களைப்போல் சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணியாளர்களும் இம்மாதத்தில் இருந்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்த அரசு உத்தரவு:

2010 ஏப்.,19 அன்று அல்லது அதன்பின் பணியில் சேர்ந்த சத்துணவு, குழந்தை மைய அமைப்பாளர், சமையலர், உதவியாளர், அங்கன்வாடி, குறு அங்கன்வாடி பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் சந்தா செலுத்தலாம். இரண்டு ஆண்டுக்கு குறைவாக பணிக்காலம் உள்ளவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கலாம். உடல்நலக்குறைவு, பெண் ஊழியர்களின் பிரசவம், உயர்கல்வி, திருமணம், இரண்டு சக்கர வாகனம் வாங்க, வீடு கட்ட இதில் இருந்து பணம் பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement