எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.
இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு தொடர்பான பிரச்சனைகளுடன் இன்னும்பிற பாதிப்புகளும் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முடி உதிர்வில் தொடங்கி 70 சதவீதம் வளர்சிதை (மெட்டாபாலிஸம்) பிரச்சனைகளுக்கு இதுவே மூல-முதல் காரணம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, 'மைக்ரோ ஓவென்' மூலம் உணவை சூடுப்படுத்தி, அவற்றை 'அரக்கப்பரக்க' பிளாஸ்டிக் டப்பாக்களுக்குள் திணித்து கொண்டு செல்வதால் சமநிலையற்ற சூடுபடுத்தல் காரணமாக அந்த உணவில் உள்ள சில வகை சத்துக்கள் 'பிஸ்பெனால் ஏ' (BPA) பாதிப்புக்கு உள்ளாகி விடுகின்றது.
இந்த பாதிப்பினால் முடி உதிர்வு மற்றும் வழுக்கைத்தலை சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிகையும் பெருமளவில் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வின் முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை