அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்., ஆகிய படிப்புகளில், பிஎச்.டி., இல்லாமலேயே, ஆராய்ச்சிப் பாடம் துவங்கப்படுகிறது. இந்தப் புதிய திட்டம், எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கு இந்த ஆண்டே அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை, சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இன்ஜி., முடிக்கும் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, மாணவர்களுக்கு ஆராய்ச்சித் திறனை அதிகரித்தால், அவர்கள் படித்து முடித்ததும், எளிதாக பணிக்கு சேரவும், நல்ல தேர்ச்சி பெறவும் முடியும் என கண்டறியப்பட்டது.
இதற்காக அமைக்கப்பட்ட, ஒன்பது பேராசிரியர்கள் கொண்ட கமிட்டி, புதிய பாடம் மற்றும் தேர்வு முறையை சமர்ப்பித்துள்ளது. இதற்கு, அண்ணா பல்கலை உடனடி ஒப்புதல் அளித்தது. அதை, இந்த கல்விஆண்டிலேயே அறிமுகப்படுத்திஉள்ளது.
இதுகுறித்து, பல்கலை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: புதிய திட்டப்படி, இந்தக் கல்வியாண்டில் எம்.இ., மற்றும் எம்.டெக்., மாணவர்களுக்கு, ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கை தயாரிப்புப் பாடம் துவங்கப்படுகிறது. செய்முறைப் பயிற்சி இல்லாத இந்தப் பாடத்துக்கு, தேர்வில், 20 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
மேலும், 'வைவா' என்ற நேரடி விளக்கங்களும் பெறப்படும். இதேபோல், பி.இ., மற்றும் பி.டெக்., போன்ற, இளநிலைப் தொழிற்கல்வி படிப்புகளுக்கு, மூன்றாவது செமஸ்டர் முதல் புதிய முறை அறிமுகமாகிறது.
அதிலும், ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தலுக்கு தனியாக, 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே, இனிவரும் காலங்களில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்.,- பி.ஆர்க்., மற்றும் எம்.ஆர்க்., ஆகிய படிப்புகளுக்கு, மூன்றுவித வினாக்கள் செமஸ்டரில் இடம் பெறும்.
அதாவது, பாடங்களை புரிந்து படித்தலுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட, 50 மதிப்பெண்களுக்குப் பதில், இனி, 40 மதிப்பெண்களும், பாடங்களை நினைவு கூர்தலுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட, 50 மதிப்பெண்களுக்குப் பதில், இனி, 40 மதிப்பெண்களும் என, மொத்தம் 80 மதிப்பெண்களும், தனியாக ஆராய்ச்சி மற்றும் ஆய்வறிக்கைகளுக்கு, 20 மதிப்பெண்களும் வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை