Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு , பள்ளிச் செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் புதிய விதிகளை வகுத்துள்ளது.

மத்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளை படி இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் தங்களது புத்தக பைகளை பள்ளிகளிலேயே விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர வழிகாட்டி நூல்களை பள்ளிக்கு கொண்டுவர அனுமதிக்கக் கூடாது.


மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அனைத்து புத்தகங்களையும் பள்ளிக்கு கொண்டுவருவதை தவிர்க்கும் வகையில் தெளிவான கால அட்டவணையை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் வகுத்தளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கொண்டுவராத பாட புத்தகங்கள் தேவைப்படும் போது அவற்றை உடனடியாக பெற உதவும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் நூலக வசதி ஏற்படுத்த வேண்டும்.

டெல்லியில் நாளை நடைபெற உள்ள கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் இந்த விதிமுறைகள் விவாதத்திற்கு வைக்கப்பட உள்ளன. அப்போது முன்வைக்கப்படும் கருத்துகளையும் சேர்த்து புதிய விதிகள் வெளியிடப்படும் என மத்திய மனித வள மேம்மபாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement