Ad Code

Responsive Advertisement

அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரி செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம்

அஞ்சல் நிலையங்கள் வாயிலாகவும், சொத்து வரி செலுத்தும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில், தற்போது 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரி செலுத்தி வருகின்றனர். மாநகராட்சி அலுவலகம், இணையதளம், வங்கி ஆகியவற்றின் வாயிலாகவும் சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி செலுத்துவோர் வசதிக்காக, மாநகராட்சி ஏற்கெனவே அஞ்சல் நிலையங்களிலும் சொத்து வரியை செலுத்தும் புதிய சேவையைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.


முதல் கட்டமாக, சென்னையிலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு கடிதம் வாயிலாக மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதுகுறித்து அஞ்சல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: அஞ்சல் நிலையங்களில், தொலைபேசி, மின்சாரக் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், சொத்து வரியையும் வசூலிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகளுடன் அஞ்சல் துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. சென்னையிலுள்ளவர்களின் சொத்துவரி மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கீழுள்ள சொத்து வரியையும், அந்தந்த அஞ்சல் நிலையங்களிலும் செலுத்தும் வசதியும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. விரைவில் இதற்கான ஒப்புதல் அஞ்சல் துறை வழங்க உள்ளது என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement