Ad Code

Responsive Advertisement

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' திட்டம் மத்திய அரசு உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர் இடையே பாலின வேறுபாடு பிரச்னையைப் போக்க, 'ஜென்டர் சாம்பியன்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

இதற்கான வழிமுறைகளை, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. இந்தியாவில், 15 - 24 வயதுக்கு உட்பட்டு, 24 கோடி பேர் இருக்கின்றனர். இது, மக்கள் தொகையில், 20 சதவீதம். இந்த இளம் தலைமுறையினரை கல்வி கற்கும் போதே, ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில், பாலின வேறுபாடு பிரச்னையைக் களைய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, 'ஜென்டர் சாம்பியன்' என்ற பெயரில், மாணவ, மாணவியரிடையே குழு தலைவர்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், 50 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, குழுத் தலைவராக நியமிக்கப்படுவர் .இவர்களுக்கு, தனியாக அடையாள அட்டை, பெயர், 'பேட்ஜ்' போன்றவை வழங்கப்படும். நன்றாக பேச, எழுத மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பேசும் வகையிலானவர்களையே, இந்த சாம்பியன் பொறுப்புக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இவர்களின் மூலம், பாலின பிரச்னை இல்லாமல், மாணவ, மாணவியர் வேறுபாடு பார்க்காமல், சமூக, கல்வி நல திட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

'ஜென்டர் சாம்பியன்' பொறுப்புக்கு வருபவருக்கு பயிற்சி அளிக்க தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட், 31ம் தேதிக்குள் பெற்று, 'ஜென்டர் சாம்பியனை' நியமிக்க வேண்டும் என, யு.ஜி.சி.,யிலிருந்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement