Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு முடிவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன:

கடந்த, 2010 முதல், தமிழக பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வித் திட்டத்தின் படி, பாட புத்தகங்களை மூன்றாக பிரித்தல் என, புத்தகப் பை எடை கூடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும், புத்தக சுமையை குறைக்க பல நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை இணைத்து, தேசிய அளவில் விரைவில் புதிய கொள்கை பின்பற்றப்படும்.

இவ்வாறு, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement