துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட நான்கு பதவிகளில் 74 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இதுவரை, 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
இதற்கு ஜூலை 10ம் தேதி முதல் 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கும் பணி துவங்கியது. டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யப்படுகிறது. நாளை நள்ளிரவு, 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை வரும் 11ம் தேதி வரை வங்கி மூலம் செலுத்தலாம்.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறும்போது, ''நேற்று மாலை, 6:00 மணி வரை 1 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் இருந்தாலும், கடைசி நேர அவசரத்தை தவிர்க்க, தேர்வர்கள் முன்கூட்டியே பதிவுசெய்வது நல்லது,''என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை