Ad Code

Responsive Advertisement

அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றி, அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சர்வ சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தில் இருந்த அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 

இதில், ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, எஸ்.எஸ்.ஏ., மூலம், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டனர்.தமிழகத்தில், 20 மற்றும், 30 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட, அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், கூடுதலாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழுள்ள நடுநிலை பள்ளிகளுக்கு, கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவது போல், எஸ்.எஸ்.ஏ., அல்லாத அரசு நடுநிலை பள்ளிகளிலும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என, கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை, 100க்கு குறையாமல் உள்ள பள்ளிகளில், மொழிப்பாட ஆசிரியர் ஒருவர், கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர் ஒருவர், சமூக அறிவியல் ஆசிரியர் ஒருவர் என,மூன்று பேர் நியமிக்க வேண்டும்.கடந்த, 2010 ஏப்., முதல் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமைசட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வு, தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றிய அரசு, எஸ்.எஸ்.ஏ.,அல்லாத பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர் நியமிக்க ஆர்வம் காட்டவில்லை. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement