மத்திய அரசின் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இந்தக் கல்வி உதவித் தொகைகள் குறித்த நேரத்தில் விரைவாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, தேசிய இ-கல்வி உதவித்தொகை இணையதளத்தை (http//sholerships.gov.in) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது.
இந்தக் கல்வி உதவித்தொகைகளைப் பெற விரும்பும் மாணவர்கள் முதலில், இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களால் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட அவர்களுடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் சார்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இணையத்தில் இறுதியாக சமர்ப்பிக்கப்படும்.
விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, ஏற்கப்பட்டு விட்டதா என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாணவர்கள் இந்த இணையதளம் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை