Ad Code

Responsive Advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வில் மொபைல் போனுக்கு தடை

மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் கலந்து கொள்வோர், மொபைல் போன், கால்குலேட்டர் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வர, மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்:மத்திய அரசு பணிகளுக்கான முதல் நிலை தேர்வு, வரும், 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வோர், மொபைல்போன், கால்குலேட்டர், ஐ.டி., சாதனங்கள், 'புளுடூத்' போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை, தேர்வு நடைபெறும் அறைக்குள் கொண்டு வரக்கூடாது. மீறினால், அடுத்து வரும் தேர்வுகளில் அவர்கள் பங்கேற்க தடை விதிப்பது உள்ளிட்ட, ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத, இரு அமர்வுகளிலும், தலா, 40 நிமிடம் கூடுதலாக அவகாசம் அளிக்கப்படும். அவர்கள், தங்கள் சார்பாக தேர்வு எழுதுவோரை அழைத்து வரலாம்.
ஆனால், ஆணையத்தால் வழங்கப்பட்ட அனுமதி அட்டை வைத்திருப்போர் மட்டுமே, மாற்றுத் திறனாளிகள் சார்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

அவ்வாறு அனுமதி பெற்ற பின், அவர்களை, மாற்றுத் திறனாளிகள் மாற்றிக் கொள்ள
அனுமதி கிடையாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயலுறவு பணி இந்திய போலீஸ் பணி உள்ளிட்டவற்றுக்கு, மூன்று நிலைகளாக தேர்வு நடைபெறுகிறது.

முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறுவோர், மத்திய அரசு பணியில் சேரலாம். முதல் நிலை தேர்வு, தலா, இரண்டு மணி நேரம் வீதம், இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement