Ad Code

Responsive Advertisement

ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல்

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் துவக்கப்பட்டுள்ள, இ - சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.  விரைவில், ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. 

கைரேகை: இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது: அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் சார்பில், தமிழகத்தில் உள்ள, 264 தாலுகா அலுவலகங்களிலும், தலா, ஒரு பொது இ - சேவை மையம் துவக்கப் பட்டுள்ளது. இந்த மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். ஆதார் அட்டை பெற ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றவர்கள், பொது இ - சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள, பதிவு எண்ணை தெரிவித்து, பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 40 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏற்கனவே, ஆதார் எண் பெற்றவர்கள், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற, 30 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். பாஸ்போர்ட்:ஆதார் அட்டை பெற்றவர் கள், முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட மாற்றம் செய்ய விரும்பினால், அதை மேற்கொள்ளும் வசதி, விரைவில், பொது இ - சேவை மையத்தில் துவக்கப்படும். அதேபோல், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வசதியும், விரைவில் ஏற்படுத்தப் படும்.அரசு கேபிள், 'டிவி' மூலம், இணையதள இணைப்பு வழங்கும் பணியும், விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement