வேலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் நடக்கிறது என்று கூறி ஆசிரியர்கள் உள்ளிருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
‘அமீத்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பணியில் இருந்த தலைமையாசிரியர் உதயகுமார் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கான அறிவிப்பு வெளியிடாமல், கலந்தாய்வு நடைபெறாமலும் எப்படி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. இதற்காக ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்டியலை நோட்டீஸ் போர்டில் ஒட்டாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும் முறைகேடாக நடக்கும் கலந்தாய்வை உடனடியாக நிறுத்தும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் அணைக்கட்டு ஒன்றியம் வேப்பங்கால், பிராமண மங்கலம், கரடிகுடி ஆகிய பகுதிகளிலும், நாட்றம்பள்ளியிலும் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி ஆசியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள் சட்ட விதிகளின்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதில் மாற்றம் செய்ய முடியாது என பதில் அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் கலந்தாய்வை நிறுத்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தரையில் அமர்ந்து கல்வி அதிகாரிகளை கண்டித்தும், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தெற்கு போலீசார், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆசிரியர்கள் கலந்தாய்வை நிறுத்தக்கோரி தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஒரு சிலருக்கு மட்டும் பணியிட மாறுதலுக்கான ஆணையை மாவட்ட கல்வி அதிகாரிகள் வழங்கினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை