ஆசிரியர் கவுன்சலிங் காக நேற்று காலை 8 மணிக்கே தலைமை ஆசிரியர்கள் வந்து காத்திருந்தனர். ஆனால் 9 மணிக்கு தொடங்க வேண்டிய கவுன்சலிங் தொடங்க நேரமாகும் என்று அறிவித்தனர். முதலில் காலிப்பணியிடங்–்கள் பட்டியலை கணினியில் வெளியிட்டனர். அதற்கு பிறகு சர்வர் வேலை செய்யாமல் போனதால் கவுன்சலிங் தொடங்க நேரம் ஆனது.
அது நீண்டுகொண்டே போனது. காலையில் தொடங்க வேண்டிய கவுன்சலிங் மதியம் தொடங்கியது. அப்போது அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்கும் கவுன்சலிங் தொடங்கியது. மொத்த காலிப் பணியிடங்கள் 450 உள்ளதாக அறிவித்தனர். அதில் 259 தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் உத்தரவுகள் பெற்றனர்.
இது தவிர உடற்கல்வி ஆசிரியர்கள் 100 பேர், கலை ஆசிரியர்கள் 49 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 150 பேர் மாவட்டத்துக்குள் மாறுதல் உத்தரவுகள் பெற்றனர். காலையில் ஏற்பட்ட சர்வர் பிரச்னையால் மாறுதலுக்கான இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு உத்தரவுகள் தயார் செய்யும் பணி இரவு 8 மணி வரை நீண்டது. இதனால் ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்நிலையில், திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் மட்டும் பெண்கள் பள்ளிகளில் உள்ள காலி இடங்களுக்கு ஆண் ஆசிரியர்களை நியமித்து உத்தரவு வழங்கப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெண் ஆசிரியர்கள் தங்களுக்கு அந்த இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பிரச்னை செய்ததால், அந்த இரண்டு மாவட்டங்களில் முதலில் வழங்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்து விட்டு பெண் ஆசிரியர்களுக்கே வழங்கப்பட்டது. இதனால் அந்த இரு மாவட்டங்களில் பிரச்னை நிலவியது. இதையடுத்து 14ம் தேதி அரசு மற்றும் ந கராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உய ர்வு வழங்கும் கவுன்சலிங் நடக்கிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை