உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், உ.பி., மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளிகள் நன்றாக இயங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
அதை மீறி தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பினால், அப்பள்ளியில் அவர்கள் அளிக்கும் பீஸ் எவ்வளவோ, அவ்வளவு பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்த வேண்டும். மேலும் அரசின் மூலம் அவர்களுக்கு வழங்குப்படும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
இதுதொடர்பாக அடுத்த 6 மாதத்தற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு தலைமை செயலரிடம், அலகாபாத் ஐகோர்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை