Ad Code

Responsive Advertisement

கல்வி அதிகாரிகள் ஆய்வில் 'இடித்த' கணக்கு - மாணவர்களை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவு

சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் இந்தாண்டு அரசு பள்ளிகள் மொத்த மாணவர்களுக்கும், வழங்கப்பட்ட இலவச நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசம் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் வாரியாக வருகை பதிவேட்டில் பதிவான மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கெடுக்க கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் இலவச நோட்டு, புத்தகங்கள் (பருவம் வாரியாக) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பள்ளிகள் துவங்கும் நாளில் இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டும் துவக்க நாளில் வழங்கப்பட்டன.

மாணவர் நலத்திட்டங்கள் குறித்து துறைச்செயலர் சபீதா, இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் அனைத்து மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் ஜூலை 29ல் நடந்தது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் குறித்த ஆய்வில் திருவள்ளூர், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை விட வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது. சில தென்மாவட்டங்களில் வழங்கப்பட்ட நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அறிய வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்களை கணக்கெடுக்கவும், அவற்றை மாவட்ட கல்வி அலுவலர்கள் நாளை (ஆக., 2) இயக்குனர் அலுவலகத்தில் தாக்கல் செய்யவும் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிகள் துவங்கும் போது மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்க கூறுகின்றனர். முந்தைய ஆண்டு வழங்கப்பட்ட மொத்த நோட்டு, புத்தகங்கள் எண்ணிக்கையில் இருந்து 5 சதவீதம் அதிகரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புத்தகம், நோட்டுக்கள் வழங்கப்பட்டன.

சில மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தும், சில மாவட்டங்களில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்ததாலும் இக்குழப்பம் எற்பட்டுள்ளது. இரண்டாம் பருவத்தில் சரியான எண்ணிக்கையில் வழங்க வேண்டும் என்பதால் மாணவர் குறித்து கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement