ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின் முதல் நாளான புதன்கிழமை 600-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சிறப்பாசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு இணையதள வழியாக நடைபெற்றது.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 265 பேருக்கு மாவட்டங்களுக்குள் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. அதேபோல, உடல்கல்வி ஆசிரியர்கள் 186 பேருக்கும், தையல் ஆசிரியர்கள் 27 பேருக்கும், ஓவிய ஆசிரியர்கள் 44 பேருக்கும், இசை ஆசிரியர்கள் 5 பேருக்கும், இடைநிலை ஆசிரியர்கள் 65 பேருக்கும் அந்தந்த மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.
அந்தந்த மாவட்டத்துக்குள் 592 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கோரிய சுமார் 100 மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பணியிட மாறுதல் பெற்றனர். இதேபோல மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கோரிய சிறப்பாசிரியர்களுக்கு வருகிற 16-இல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையாக நடந்தது: கடந்த ஆண்டைப் போல இல்லாமல், காலியாக உள்ள அனைத்து இடங்களும் காண்பிக்கப்பட்டு வெளிப்படையான முறையில் முதல் நாள் கலந்தாய்வு நடைபெற்றது.
அடுத்து வரும் நாள்களிலும் இதேபோல வெளிப்படையாக கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை