Ad Code

Responsive Advertisement

4ம் வகுப்பு படித்தவருக்கு அரசு வேலை தர உத்தரவு

எட்டாம் வகுப்பு படிக்கவில்லை' எனக்கூறி, கருணை வேலை அளிக்க மறுத்த, மின்வாரிய அதிகாரியின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த, திருமணி ராஜா என்பவர், தாக்கல் செய்த மனு:கள்ளக்குறிச்சியில், மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய என் தாய், 2012 ஜூலையில் இறந்தார்.


நான், நான்காம் வகுப்பு படித்துள்ளேன்; கருணை அடிப்படையில் வேலை கோரினேன்.விண்ணப்பத்தை, கள்ளக்குறிச்சி மின் வினியோக வட்ட, கண்காணிப்பு பொறியாளர், ஜூனில் நிராகரித்தார். 'எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை' என, காரணம் கூறப்பட்டது. கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்; கருணை அடிப்படையில், வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:


சில பணியிடங்களில், நான்காம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க, பணி விதிகள்இடம் அளிக்கவில்லை என்பது உண்மையே. அதேபோல், சில பணியிடங்களுக்கு, தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதும் என்பதும் உள்ளது.கல்வி தகுதியை வலியுறுத்தாமல், ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். எனவே, கண்காணிப்பு பொறியாளரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. நான்காம் வகுப்பு தகுதி அடிப்படையில், தகுதியான வேலையை, மனுதாரருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு,நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement