Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 தனித்தேர்வுகள்செப்., 28ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் மீண்டும் தேர்வு எழுதுவோர், பத்தாம் வகுப்பு தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியில் தேர்வு எழுதும் நேரடி தனித்தேர்வர்களுக்கு 
செப்டம்பர் 28 முதல் தேர்வுகள் துவங்க உள்ளன.

தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை தேர்வு நடைபெற உள்ளது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஆண் தனித்தேர்வர்களுக்கும், பெண் தனித்தேர்வர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள தனித்தனி சேவை மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் ஆகஸ்ட்13 முதல் 19 வரை மாலை 5.45 மணிக்குள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம். மறுமுறை தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், இதர கட்டணமாக ரூ.35 செலுத்த வேண்டும்.

நேரடி தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணம் ரூ.150, இதர கட்டணம் ரூ.35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுக்கு ரூ.2 வீதம் மொத்தம் ரூ.187. இதனுடன் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement