Ad Code

Responsive Advertisement

குரூப் - 2 பதவிகளுக்கு24ம் தேதி கலந்தாய்வு

'குரூப் - 2 நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, வரும், 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:குரூப் -- 2 நேர்முக தேர்வு பதவிகளில், 1,136 காலியிடங்களை நிரப்ப, முதன்மை எழுத்துத் தேர்வு, 2014 நவ., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 2,222 பேருக்கு, ஜூலை 15ம் தேதி முதல், ஆக., 8ம் தேதி வரை, நேர்காணல் நடந்தது; அதில் தேர்வானவர் விவரங்கள், ஆக., 10ம் தேதி வெளியிடப்பட்டன. நேர்காணலில் பங்கேற்ற, 2,222 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வு, ஆக., 24ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் நடக்கும்.

எப்போது கலந்தாய்வு என்ற விவரம், அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.கடிதம் வராதவர்கள், தேர்வாணைய இணைய தளத்தில் கடித நகலை பதிவிறக்கம் செய்து பங்கேற்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில், வர தவறினால், கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement