Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க ஆக.19 கடைசி நாள்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 13 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

பிளஸ் 2 பொதுத் தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் பதினாறரை வயது பூர்த்தியும் ஆகியவர்கள் "நேரடி தனித் தேர்வர்களாக' இந்த துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.சேவை மையங்கள்: விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கென, கல்வி மாவட்டம் வாரியாக அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட சேவை மையங்களுக்கு வியாழக்கிழமை (ஆக.13) முதல் சென்று விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பத்தைப் பதிவு செய்ய ஆகஸ்ட் 19 கடைசித் தேதியாகும்.


தேர்வுக் கட்டணம்: பிளஸ் 2 தேர்வை ஏற்கெனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், இந்த துணைத் தேர்வில் பங்கேற்க பாடம் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனுடன் இதர கட்டணமாக ரூ. 35, ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ. 50 செலுத்தவேண்டும்.நேரடி தனித்தேர்வர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ. 150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ. 2 என மொத்தம் ரூ. 187 செலுத்த வேண்டும். அதனுடன் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதிகள்: செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1, செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2, செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1, அக்டோபர் 1 - ஆங்கிலம் தாள்-2, அக்டோபர் 3 - இயற்பியல், பொருளியல், அக்டோபர் 5 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச் சத்து-உணவுக் கட்டுப்பாடு, அக்டோபர் 6 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல், அக்டோபர் 7 - வேதியியல், கணக்குப் பதிவியல், அக்டோபர் 8 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம், அக்டோபர் 9 - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ், அக்டோபர் 10 - அனைத்து தொழில் பிரிவு தியரி, அரசியல் அறிவியல், செவிலியர் பாடம் (பொது), புள்ளியியல். மேலும் விவரங்களுக்கு www.tndge.in என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement