தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -- 2 தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றதில், முதல், 10 இடங்களில், பி.இ., பட்டதாரிகள் பிடித்துள்ளனர்.
தினமும், 300 பேர் வீதம், வரும், 1ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கிறது. முதல் நாள் கலந்தாய்வில், முதல், 10 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, தேர்ச்சி ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் மற்றும் செயலர் விஜயக்குமார் ஆகியோர் வழங்கினர். தேர்வானவர்களில் அமுதா என்பவரை தவிர, மற்ற ஒன்பது பேரும், துணை வணிகவரித் துறை ஆணையர் பதவியை தேர்வு செய்தனர்.
எட்டு பேர்முதல், 10 இடங்களில் வந்தவர்களில், விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜெயப்ரீதா என்ற எம்.இ., பட்டதாரி, முதல் இடத்தைப் பெற்றார். முதல், 10 இடங்கள் பிடித்தவர்களில் எட்டு பேர், பி.இ., பட்டதாரிகள். மற்ற இருவரில், ஒருவர் பி.சி.ஏ., - மற்றொருவர், பி.ஏ., ஆங்கிலம்.
கலந்தாய்வு ஒத்திவைப்பு
ஓணம் பண்டிகைக்காக, வரும், 28ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று நடக்க இருந்த, டி.என்.பி.எஸ்.சி., கலந்தாய்வு, வரும், 29ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை