பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் தேசிய மக்கள் தொகை பதிவகம், ஆதார் அட்டை எண் ஆகியன மூலம் குற்றப்பதிவியல் இணையம் வாயிலாக சரி பார்க்கப்படும். இதற்கான வசதி அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாவட்ட காவல் அலுவலகங்களை தேசிய குற்ற பதிவியில் காப்பகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் போலீஸ் விசாரணை முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தால் தற்போது சுமார் 1 மாத காலம் வரை எடுத்துக் கொள்ளப்படும் போலீஸ் விசாரணை, ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்படும். ஆன்லைன் போலீஸ் விசாரணை கடந்த மாதம் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை