'பைலட்'டாகி, விமானத்தில் பறக்க வேண்டும்' என்ற, 11 வயது சிறுவனின் ஆசையை, சூலுார் விமானப்படை அதிகாரிகள் நிறைவேற்றினர். 'தலசீமியா' எனும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் முகிலேஷ், 11, கோவை, ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில், 'கீமோதெரபி' சிகிச்சை பெற்று வருகிறான்.
பைலட்' ஆகி, விமானத்தில் பறக்க வேண்டும் என்ற தன் ஆசையை, பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்தான். இதை, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் 'மேக் ஏ விஷ்' பவுண்டேஷன் நிர்வாகிகளிடம், பெற்றோர் தெரிவித்தனர். சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்கும்படி, சூலுார் விமான படைத்தள ஏர் கமோடர் உமேஷ் குமாரிடம் கோரிக்கை விடப்பட்டது.
அதை ஏற்ற அதிகாரிகள், சிறுவனின் ஆசையை நிறைவேற்ற அனுமதியளித்தனர். கேப்டன் குப்தா தலைமையிலான குழுவினர், சிறுவன் விமானத்தில் பறப்பதற்கான ஏற்பாடுகளை, நேற்று முன்தினம் செய்தனர். சீருடை, பேட்ஜ், தொப்பி சகிதமாக, விமானத்தில் ஏறிய சிறுவனுக்கு, விமானப்படை வீரர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், கைகுலுக்கி வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, 'பைலட்' இருக்கையில் சிறுவன் முகிலேஷ் அமர, விமானம் கிளம்பி பறந்தது. சிறுவன் திருப்தி அடையும் வரை பறந்த விமானம், மீண்டும் விமான தளத்துக்கே திரும்பி வந்தது.
விமானத்தில் பறந்த சிறுவன், மிகுந்த பெருமிதத்தோடு இருந்ததாகவும், மகன் ஆசையை நிறைவேற்றிய திருப்தியில், பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதிகாரிகள்
தெரிவித்தனர்.
மகிழ்ச்சி:
இதையடுத்து, விமானப்படை அருங்காட்சியகத்தையும் சிறுவன் பார்வையிட்டான். அதிகாரிகளுடன் மிக உற்சாகமாக பேசிய சிறுவன், 'சரங்' ஹெலிகாப்டர் உள்ளே அமர்ந்து, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தான். சிறுவனின் பைலட் ஆசையை நிறைவேற்றியதில், பெற்றோர், விமானப்படை அதிகாரிகள், மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சிஅடைந்தனர்.



0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை