சென்னையில் தலைமைச் செயலக ஊழியர்களுக்கு சலுகை விலையில் தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விற்பனை புதன்கிழமை வரை நடைபெறுகிறது.தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதை பின்பற்றும் வகையில், தலைக்கவசம் வாங்குவதற்காக மக்கள் அலைமோதுகின்றனர்.
இதனால், அதன் விலையை விற்பனையாளர்கள் பன்மடங்கு உயர்த்தியுள்ளனர்.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு குறைந்த விலையில் தலைக்கவசம் கிடைப்பதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 10 சதவீத சலுகை விலையில் தலைக்கவசம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை புதன்கிழமை (ஜூலை 1) வரை நடைபெறும். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள், சலுகை விலையில் தலைக்கவசம்வாங்கிச் சென்றுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை