''ஹெல்மெட் அணியும் விதிமுறை, அனைவருக்கும் பொதுவானது; நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ, பத்திரிகையாளர்களோ, சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல,'' என, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்தார்.
'ஹெல்மெட்' அணிய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், சிலர், அதற்கு எதிராக பேரணி நடத்தியது குறித்து, நிருபர்கள் கேட்டதற்கு, கவுல் கூறியதாவது:சட்டம் அனைவருக்கும் பொதுவானது; பிரஸ், வழக்கறிஞர் என, 'ஸ்டிக்கர்'கள் அணிந்து கொள்வது, அவரவர் வளாகங்களில் புரிந்து கொள்வதற்கு தான். பத்திரிகையாளரோ, வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ, அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்; யாரும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.ஹெல்மெட் அணிவதில் விதிவிலக்கு தேவையென விரும்புவோர், நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை