சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர் மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்ற விதவைகள் ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள் ஆதரவற்ற விவசாயிகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வருவாய்த் துறை மூலம் வழங்கப்படுகிறது.
வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காதவர்கள் திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்கள் அதுகுறித்த சந்தேகங்கள் மற்றும் குறைகள் குறித்து புகார் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் 1800 4251090 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில் 'சென்னை உட்பட 32 மாவட்டங்களில் பயனாளிகளை அலைய விடுவோர் மற்றும் தகுதியிருந்தும் ஓய்வூதிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதுபற்றி உடனடியாக கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். அவர்களின்
புகார்கள் நிவர்த்தி செய்யப்படும்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை