Ad Code

Responsive Advertisement

21 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி.

பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) 21 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாக வெளியிடப்பட்ட இந்த 21 பல்கலைக் கழகங்களில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 8 உள்ளது. தலைநகர் டெல்லியில் 6 உள்ளது.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் தலா 1 போலி பல்கலைக் கழகங்களை பட்டியலிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-ன் படி மத்திய/மாநில/மாகாண சட்டம் அல்லது இந்தச் சட்டத்தின் பிரிவு 3-ன் படி பல்கலைக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டவையே முறையான பல்கலைக் கழகங்கள். 

எனவே விதிமுறைகளுக்கு ஏற்ப முறையான தகுதி இல்லாத கல்வி நிறுவனங்கல் தங்களை சட்டப்பிரிவு 23-ன் படி பல்கலைக் கழகம் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது. 

டெல்லியில், வரன்சேயா சமஸ்கிருத விஸ்வ வித்யாலயா கமர்ஷியல் யுனிவர்சிட்டி, யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வோகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் செண்ட்ரல் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி உள்ளிட்ட 6 போலி பல்கலைக் கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement