Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குரிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், டிப்ளமோ படிப்பில் 173 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.

 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலிருந்து இந்தக் கலந்தாய்வுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கலந்தாய்வுக்கு மொத்தமாகவே 2,759 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

ஆங்கிலம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் பயில விண்ணப்பித்திருந்தவர்கள், சிறப்புப் பிரிவினருக்கு முதல் நாளான புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. எனவே, இதில் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். தமிழ் வழியில் படித்த தொழில்பிரிவு, கலைப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் போது, சேர்க்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement