குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. துணை ஆட்சியர் பணியிடங்கள்-19, காவல் துணை கண்காணிப்பாளர்கள்-26, உதவி வணிக வரி அலுவலர்கள்-21, மாவட்ட பதிவாளர்கள்-8 என குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 74 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ளது.
குரூப் 1 முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். 3 அல்லது 4 ஆண்டு பட்டப் படிப்புக்கான இறுதித் தேர்வு எழுதி முடித்து காத்திருப்போரும் தேர்வை எழுதலாம்.
இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி கடைசி நாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளைக் கொண்டதாகும். ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறு தேர்வுக்குச் செல்ல முடியும்.
துணை ஆட்சியர் பணிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதுபோல துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உயர்வு பெறலாம்.
முதல் நிலைத் தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை