Ad Code

Responsive Advertisement

சொர்க்கமே என்றாலும் அரசுப்பள்ளி போல வருமா!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு!

ஏழை எளிய மக்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியிலும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் களம் இறங்கியுள்ளனர். 







கடலுர் நகராட்சி வன்னியர் பாளையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தொடக்கப்பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தமிழ் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குழந்தைவேளனார், சிவபிரகாசம், ரகு, சுப்பிரமணியம், ராமமச்சேந்திர சோழன் ஆகியோர் ஜூன் 1ஆம் தேதி இனிப்புகளை வழங்கினர். மேலும், பெண் பிள்ளைகளை பள்ளியில் சேர்ந்த தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கினர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டொமினிக் உள்பட ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்று, பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூரில் 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் ஜூன் 1ம் தேதி , பள்ளிக்கு வந்தனர். அப்போது ஊர் மக்கள் சார்பில் மேளதாளம் முழுங்க வரவேற்பு அளித்தனர். 

இப்பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 78 பேர் தேர்ச்சி அடைந்தனர். இப்பள்ளியில் 95.12 சதவிகிதம் தேர்ச்சி அடைந்ததை ஊர்மக்களும், ஆசிரியர்களும் பெருமையாக கருதுகின்றனர். ஆகையால்தான் 

இந்த வருடம் பள்ளி திறக்கும்போது ஆசியரிகளும் நன்றாக பணியாற்ற வேண்டும். மாணவர்களும் நன்கு பயில வேண்டும் என்பதற்காக ஊர் பொதுமக்கள் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement